சென்னையின் முதல் புல்லட் ரயில் நிலையம் ; டெண்டர் வெளியீடு ; எங்கு அமையும்?

சென்னை – பெங்களூரு இடையிலான புல்லட் ரெயில் திட்டத்திற்கான கட்டுமானப் பணிகளை முன்னெடுக்க அதிகாரப்பூர்வமாக டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புல்லட் ரயில் பாதை மொத்தம் 306 கிலோமீட்டர் நீளத்தில் அமைக்கப்பட உள்ளது. இந்த வழித்தடத்தில்
சென்னை சென்ட்ரல், பூந்தமல்லி, அரக்கோணம், சித்தூர், கோலார், கொடிஹள்ளி, ஒயிட்பீல்டு, பெங்களூரு என மொத்தம் எட்டு முக்கிய ரயில் நிலையங்கள் உருவாக்கப்பட உள்ளன. இந்த நிலையங்கள் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களை இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த புல்லட் ரயில் மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், சென்னை – பெங்களூரு இடையிலான ரயில் பயண நேரம் சுமார் 73 நிமிடங்களாக குறையும் என அதிகாரிகள் கணித்துள்ளனர். அடிக்கடி பயணம் செய்யும் நபர்களுக்கு இது வசதியாக இருக்கும்.

சென்னையின் முதல் புல்லட் ரெயில் நிலையம், சென்னை புறநகர் ரயில் நிலையத்தின் மேற்கு பகுதியில் அமைக்கப்பட உள்ளது. இந்த புதிய நிலையம் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையத்துடன் நடைபாதை இணைப்புகள் மூலம் இணைக்கப்பட உள்ளது.

மொத்த 306 கிலோமீட்டர் பாதையில் சுமார் 28 கிலோமீட்டர் தூரம் நிலத்தடி சுரங்கப்பாதையாக அமைக்கப்பட உள்ளது. இந்த சுரங்கப்பாதை பாதுகாப்பு மற்றும் வேகமான போக்குவரத்து ஆகிய இரண்டிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புல்லட் ரெயில் திட்டத்தை 2035-ஆம் ஆண்டுக்குள் முழுமையாக நிறைவேற்ற அதிகாரிகள் இலக்கு நிர்ணயித்துள்ளனர். திட்டத்தின் மொத்த மதிப்பீடு சுமார் ரூ.18,000 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது.

Related Post

Latest News