இந்திய ஜனநாயக கட்சியின் (IJK) தலைவர் ரவி பச்சமுத்து அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஐ.ஜே.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, வேலூர் மாவட்டம் அரியூர் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற சாய்பாபா கோயிலில் ஐ.ஜே.க சார்பில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கட்சித் தலைவர் ரவி பச்சமுத்து அவர்களின் நல்வாழ்விற்காகவும், நீண்ட ஆயுளுக்காகவும் சாய்பாபாவிற்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளும் செய்யப்பட்டன.
வழிபாட்டைத் தொடர்ந்து, ஐ.ஜே.க வேலூர் மாவட்டத் தலைவர் முத்துக்குமார் தலைமையில், அங்கு திரண்டிருந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட செயலாளர் காசி சுதர்சன் மற்றும் பொருளாளர் ராஜா, இளைஞர் அணி சங்கர் , காட்பாடி சட்டமன்ற தொகுதி தலைவர் மனோஜ் , மாவட்ட செயலாளர் சுதர்சன், இளைஞரணி செயலாளர் ராஜசேகர், அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி தலைவர் கார்த்தி, செயலாளர் பிரபாகரன், பொருளாளர் ராம்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் உடன் இருந்தனர்.
