வேலூரில் நவீன சிகிச்சை மையம் தொடக்கம்; உலகத் தர கருவிகளுடன் சேவை

வேலூர் ஆபீஸ் லைன் கிருஷ்ணா நகரில் (ஐசிஐசிஐ வங்கி அருகில்) செயல்பட்டு வரும் இ.என்.டி. டாக்டர் எ. சிவக்குமார் கிளினிக்கில், தலைச்சுற்றல், மயக்கம் மற்றும் சமநிலை குறைபாடுகளுக்கான நவீன சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

காது, மூக்கு, தொண்டை சிகிச்சை நிபுணரான டாக்டர் எ. சிவக்குமார், மருத்துவத் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். வேலூர் மற்றும் சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் காது, மூக்கு, தொண்டை சிகிச்சைப் பிரிவு தலைவராகவும், மருத்துவக் கண்காணிப்பாளராகவும், மருத்துவக் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், சர்வதேச அறுவை சிகிச்சை நிபுணர்கள் கல்லூரியின் ஃபெலோஷிப் பெற்றவரும் ஆவார்.

நோயாளிகளுக்கு உலகத் தரத்தில் சிகிச்சை வழங்கும் நோக்கில், கிளினிக் நவீன மருத்துவ உபகரணங்களுடன் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராக பள்ளிகொண்டா அருகேயுள்ள ஸ்ரீஸ்தலம் ஸ்ரீ வாராஹி ஷேத்திரத்தின் நிறுவனர் யாகரிஷி ஸ்ரீ வராஹ குருஜி கலந்து கொண்டு, சிறப்பு யாகம் நடத்தி புதிய சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் டாக்டர்கள் எ. சிவக்குமார், நிவேதிதா சிவக்குமார், விஷ்ணு, கிருத்திகா விஷ்ணு உள்ளிட்டோர் விருந்தினர்களை வரவேற்றனர்.

இதுகுறித்து டாக்டர் எ. சிவக்குமார் கூறியதாவது:

“காது, மூக்கு, தொண்டை நோய்கள் மட்டுமின்றி, தலைச்சுற்றல், மயக்கம், சமநிலை பாதிப்பு போன்ற பிரச்சினைகளுக்காக வேலூர் மாவட்டத்தில் முதல்முறையாக உலகத் தர நவீன கருவிகள் மூலம் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக அதிநவீன மருத்துவ உபகரணங்கள் கிளினிக்கில் நிறுவப்பட்டுள்ளன.

நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை வழங்கி, அவர்கள் முழுமையாக குணமடையச் செய்வதே எங்களது முக்கிய நோக்கம். இந்த மையத்தின் மூலம் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களும் குறைந்த செலவில் சிறந்த சிகிச்சை பெற முடியும்.

தற்போது சிகிச்சை மையம் தினமும் பிற்பகலில் செயல்பட்டு வருகிறது. விரைவில் வெளியூரிலிருந்து வரும் நோயாளிகளின் வசதிக்காக காலை மற்றும் மாலை நேரங்களிலும் சிகிச்சை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் டாக்டர்கள் அருணன், பரணி, டி. நந்தகுமார், ராமரத்தினம், அருளாளன், செந்தாமரை கண்ணன், குமரேசன், காளிதாஸ், சுபபிரியா, த.வெ.க. வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன், முன்னாள் எம்.எல்.ஏ. நீலகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

Related Post

Latest News