பணம்கேட்டு மிரட்டிய ‘தர்பூசணி திவாகர்’ கைது : கீழ்பாக்கத்திற்கு அழைத்துச்சென்ற போலீசார்

சமூக வலைதளங்களில் தான் ஒரு நடிகர் என்றும், தன்னைத்தானே ‘வாட்டர் மெலன் ஸ்டார்’ என்றும் அழைத்துக்கொள்ளும் நபர் தான் இந்த திவாகர். பின்னர் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றார். கடந்த சில மாதங்களாக பல்வேறு சர்ச்சைகள் தொடர்பாக அவரது பெயர் அடிக்கடி செய்திகளில் இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில், யூடியூப் சேனல் ஊழியரை மிரட்டி பணம் கேட்டுள்ளார். இது குறித்து, சென்னை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து போலீசார் கொலை மிரட்டல், பணம் கேட்டு மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் திவாகர் மீது வழக்குப்பதிவு செய்து மதுரையில் இருந்த திவாகரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Post

Latest News