என்ன இப்பெல்லாம் கடிக்க ஆரம்பிச்சுட்டாங்க., டி.எஸ்.பியின் கையை கடித்த தவெக தொண்டர்

முதலமைச்சர் விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக இருந்த நிலையில், அனுமதி பாஸ் இல்லாமல் உள்ளே செல்ல முயன்ற இளைஞர் ஒருவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்னர் டி.எஸ்.பி-யை கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கரூரில் முதல் அமைச்சர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் பாதுகாப்பு காரணங்களால், அதிகாரப்பூர்வ அனுமதி பாஸ் வைத்திருந்தவர்களுக்கு மட்டுமே நுழைவு வழங்கப்பட்டது. இந்த நடைமுறையை அறியாமல் வந்த மெல்வின் என்ற இளைஞரை, பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஆத்திரமடைந்த அந்த இளைஞர், அருகில் வைக்கப்பட்டிருந்த பேனரை கிழித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, அந்த இளைஞர், தன்னை அனுமதிக்குமாறு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், டி.எஸ்.பி அனுமதி வழங்க முடியாது என்று தெரிவித்தார்.

இதையடுத்து திடீரென ஆவேசமடைந்த அந்த இளைஞர், டி.எஸ்.பியின் கையை பிடித்து கடித்துள்ளார். உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இளைஞரை பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.

இதே போல, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், தருமபுரியில் தவெக சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், பாதுகாப்பு பணியில் இருந்த காவலரின் கையை கடித்த தவெக தொண்டரை போலீசார் கைது செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியது.

Related Post

Latest News