எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ஜனநாயகன். விஜய்யின் கடைசி படம் என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. கடந்த ஜனவரி மாதம் வெளியாகவேண்டிய இப்படம் சென்சார் பிரச்சனை காரணமாக படம் வெளியாகவில்லை.
பின்னர், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் மாதத்தில் படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக திட்டமிட்ட தேதிகளில் படம் வெளியாகவில்லை.
இந்த சூழலில், ‘ஜனநாயகன்’ படத்திற்கு ஏ தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட உள்ளதாகவும் இதனால் வருகிற 24-ந்தேதி இப்படத்தை வெளியிடும் பணி மும்முரமாக நடைபெற்றுவருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
