வேலூர் மாவட்டம் காட்பாடி வன சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக யானை தந்தத்தை கடத்தி வந்து விற்பனை செய்ய இருப்பதாக கிடைந்த ரகசிய தகவலின் அடிப்படையில் காட்பாடி வனச்சரக அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் காட்பாடி அருகே அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் (53) என்பவரின் மாந்தோப்பில் இரண்டு யானை தந்தம் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து விற்பனைக்கு வைத்திருந்த இரண்டு யானை தந்தம், கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்த நிலையில் யானை தந்தத்தை விற்பனைக்கு வைத்திருந்ததாக ஜெயக்குமார் மற்றும் கே.வி.குப்பம் தேவிகாபுரத்தை சேர்ந்த சீனிவாசன் ஆகிய இரண்டு பேரை கைது செய்து காட்பாடி வனச்சரக வனத்துறையினர் விசாரணையில்
முதற்கட்ட விசாரணையில் ஆந்திராவில் இருந்து யானை தந்தங்களை கொண்டு வந்ததாக தெரியவந்துள்ள நிலையில், யானை தந்தத்தை விற்பனை செய்த முக்கிய குற்றவாளி ஆந்திர மாநிலத்தை சேர்ந்த முருகேஷ் என்பவர் பரதராமி கெங்கையம்மன் கோவில் அருகே பதுங்கி இருப்பதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில்
குடியாத்தம் வனத்துறையினர் இன்று காலை முருகேஷை சுற்றி வளைத்து கைது செய்தனர் மேலும் அவரிடம் இருந்த பல்சர் வாகனத்தையும் பறிமுதல் செய்து கைது செய்யப்பட்ட முருகேஷை காட்பாடி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர் தற்போது காட்பாடி வனத்துறையினர் கைது செய்யப்பட்ட மூன்று பேரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
