வன்முறை மற்றும் ஆபாச வார்த்தைகள் : ‘ஜனநாயகன்’ படத்தில் 13 கட்

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ஜனநாயகன். விஜய்யின் கடைசி படம் என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. கடந்த ஜனவரி மாதம் வெளியாகவேண்டிய இப்படம் சென்சார் பிரச்சனை காரணமாக படம் வெளியாகவில்லை.

பின்னர், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் மாதத்தில் படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக திட்டமிட்ட தேதிகளில் படம் வெளியாகவில்லை.

ஜனநாயகன் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் குறித்த விவரங்கள் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளன.

தணிக்கைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, படத்தில் இடம்பெற்றிருந்த வன்முறை மற்றும் ஆபாச வார்த்தைகளைக் குறைப்பதற்காக மொத்தம் 13 கட் மற்றும் மாற்றங்கள் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, படத்தில் கதாபாத்திரங்கள் பேசும் தமிழ் மற்றும் ஆங்கில கெட்ட வார்த்தைகளை முழுமையாக ‘மியூட்’ செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான காட்சிகள் வரும்போது, அதற்கு எதிரான சட்டப்பூர்வ எச்சரிக்கை வாசகத்தை (Disclaimer) திரையில் வைக்க வேண்டும் என்றும் சென்சார் போர்டு தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. மேலும், சண்டைக் காட்சிகளில் வரும் அதிகப்படியான ரத்தக்கறை, காது அறுபடுவது போன்ற கொடூரமான காட்சிகளின் தீவிரத்தைக் குறைக்க தணிக்கைக்குழு உத்தரவிட்டுள்ளது. 43 நொடிகள் வெட்டப்பட்ட பிறகும் படத்தின் நீளம் 180 நிமிடங்களாக உள்ளது.

Related Post

Latest News