இயக்குநராக பல வெற்றி திரைப்படங்களை வழங்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகராக அறிமுகமாகும் ‘DC’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் வெளியான கிளிம்ப்ஸ் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
அருண் மாதேஷ்வரன் இயக்கியுள்ள இப்படத்தில் வாமிகா கபி கதாநாயகியாக நடித்துள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.
இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ‘DC’ திரைப்படம் ஜூலை 31, 2026 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

