எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ஜனநாயகன். விஜய்யின் கடைசி படம் என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. கடந்த ஜனவரி மாதம் வெளியாகவேண்டிய இப்படம் சென்சார் பிரச்சனை காரணமாக படம் வெளியாகவில்லை.
பின்னர், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் மாதத்தில் படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக திட்டமிட்ட தேதிகளில் படம் வெளியாகவில்லை.
தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தமிழில் ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலைத் தொடர்ந்து, படத்தை ஜூலை மாதத்திலேயே திரையரங்குகளில் வெளியிடும் முயற்சியில் படக்குழு இருப்பதாக சினிமா வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.
இருப்பினும், சென்சார் சான்றிதழ் அல்லது வெளியீட்டு தேதி குறித்து தயாரிப்பு நிறுவனம் அல்லது படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
