தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்: முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்!

போலியோ இல்லாத ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும் நோக்கில், தமிழகம் முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான இலவச போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. சென்னை பாலவாக்கத்தில் நடைபெறும் பிரத்யேக நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் விஜய் இந்த முகாமை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கிறார்.

சென்னை பாலவாக்கத்தில் உள்ள ஆதி திராவிடர் நல உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நாளை காலை இந்தத் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் முதலமைச்சர் விஜய் நேரில் பங்கேற்று, குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்தை ஊட்டி இந்த மாநில அளவிலான முகாமைத் தொடக்கி வைக்க உள்ளார்.

முதலமைச்சர் பங்கேற்கும் இந்த முகாமிற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பாலவாக்கம் பள்ளியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் மருத்துவ வசதிகளை மாநகராட்சி கமிஷனர் ஜி.எஸ்.சமீரன் நேரில் சென்று பார்வையிட்டு, அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 52.91 லட்சம் குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காகப் பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் மாநிலம் முழுவதும் மொத்தம் 43,051 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Related Post

Latest News