6 மாத குழந்தை அழுததால் கழுத்தை அறுத்த கொடூர தாய் : பீகாரில் அதிர்ச்சி சம்பவம்

பீகார் மாநிலத்தில் பெற்ற தாயே தன்னுடய 6 மாதக் குழந்தையின் கழுத்தை அரிவாளால் அறுத்துக் கொலை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள கோபால்பூர் காவல் எல்லைக்குட்பட்ட பர்கா கிராமத்தைச் சேர்ந்தவர் சுனில் தாஸ். இவர், வேலைக்காக சண்டிகரில் வசித்து வருகிறார். ஊரில் உள்ள அவரது வீட்டில் மனைவி சீமா தேவி, 6 மாதக் குழந்தை பூஜா குமாரி மற்றும் சுனில் தாஸின் தாயார் ஆகியோர் வசித்து வந்தனர்.

கடந்த வியாழக்கிழமை இரவு, சீமா தேவியின் அறையில் இருந்து திடீரென அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மாமியார் ஓடிவந்து பார்த்தபோது, அங்கு ரத்த வெள்ளத்தில் 6 மாதக் குழந்தை பூஜா தரையில் கிடந்துள்ளார். அதே நேரத்தில், சீமா தேவி கையில் இருந்த அரிவாளால் தன் கழுத்தையே அறுக்க முயன்றுள்ளார். இதை பார்த்து ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், கோபால்பூர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். இதையடுத்து குழந்தையை கொன்ற தாயை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Post

Latest News