பிரபல நடிகர் வீட்டில் ரூ.10 லட்சம் வைர நெக்லஸ் திருட்டு: ஈஞ்சம்பாக்கத்தில் பரபரப்பு

சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் பிரபல நடிகர் ரவி மோகன் வசித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது வீட்டில் ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸ் மற்றும் ரொக்கப் பணம் திருடப்பட்டதாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் பிரபல நடிகர் ரவி மோகன் வசித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது வீட்டில் இருந்த சில முக்கியப் பொருட்கள் திடீரென காணாமல் போயுள்ளன. இந்தச் சம்பவத்தை ஒட்டி, வீட்டில் வேலை செய்த ஊழியர்களைச் சட்டவிரோதமாக அடைத்து வைத்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து போலீசார் அங்குச் சென்று அவர்களை மீட்டுள்ளனர்.

இதை பார்த்து அதிருப்தியடைந்த போலீசார், “திருட்டு அல்லது ஏதேனும் சந்தேகம் இருந்தால் சட்டப்படி காவல் நிலையத்தில்தான் புகார் அளிக்க வேண்டும். அதைவிடுத்து எவரையும் தனிப்பட்ட முறையில் அடைத்து வைத்து விசாரிக்க எவருக்கும் உரிமை இல்லை” என்று ரவி மோகன் தரப்பினருக்குக் கடுமையான அறிவுரைகளை வழங்கினர்.

இதையும் படிங்க : முட்டுக்காட்டுக்கு மாறுகிறதா தமிழ்நாடு சட்டப்பேரவை? வெளியான புதிய தகவல்!

போலீசாரின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, உரிய ஆதாரங்களுடன் நடிகர் ரவி மோகனின் மேலாளர் நீலாங்கரை காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், வீட்டில் வேலை செய்யும் ஊழியர்கள் அங்கிருந்த ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான வைர நெக்லஸ் மற்றும் 40 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தைத் திருடிச் சென்றுவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Post

Latest News