தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், ஜூன் 24, 2026 (புதன்கிழமை) அன்று குறிப்பிட்ட பகுதிகளில் தற்காலிகமாக மின்விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
சென்னையில் செம்பியம், சந்திரபிரபு காலனி, தனிகாசலம் நகர், மூலக்கடை, அன்னை சத்யா நகர், வெங்கடேஸ்வரா நகர், போலீஸ் குடியிருப்பு, மாதவரம் நெடுஞ்சாலை, கே.எச். சாலை, நாகையா தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
அதேபோல் பல்லாவரம் மண்டலத்துக்குட்பட்ட கீழ்க்கட்டளை, பாலமுருகன் நகர், அம்பாள் நகர், தேன்மொழி நகர், பூபதி நகர், சௌந்தரராஜன் நகர், குமரன் நகர், திருவள்ளுவர் நகர், 200 அடி ரேடியல் சாலை, ராஜா நகர், எஸ். கொளத்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
எண்ணூர் பகுதியில் கத்திவாக்கம், எண்ணூர் பஜார், காட்டுகுப்பம், நேரு நகர், சாஸ்திரி நகர், அண்ணா நகர், வள்ளுவர் நகர், காமராஜர் நகர், விஓசி நகர், உலகநாதபுரம், எர்ணாவூர், பாலாஜி நகர், மகாலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
கரூர் மாவட்டத்தில் காமராஜபுரம், கே.வி.பி நகர், செங்குந்தபுரம், பெரியார் நகர், ஜவஹர் பஜார், திருமாநிலையூர், அக்ரஹாரம், காந்தி நகர், ரத்தினம் சாலை, கோவை ரோடு, வடிவேல் நகர், ஆண்டாங்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தின் கீழ் உள்ள யமுனா நகர், கணுவாய், கலப்பநாயக்கன்பாளையம் (ஒரு பகுதி), ஜி.சி.டி நகர், கே.என்.ஜி புதூர், தடாகம் சாலை, சோமையம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளும், மயிலம்பட்டி (மெட்ரோ) துணை மின் நிலையத்துக்குட்பட்ட காரையம்பாளையம், சின்னியம்பாளையம், மயிலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைகொளம்பாளையம், வெங்கட்டாபுரம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
