ரூ.50 கோடிக்கும் மேல் வசூல் வேட்டை! அர்ஜுனின் ‘பிளாஸ்ட்’ படம் எந்த ஓடிடியில்? எப்போது ரிலீஸ்?

அறிமுக இயக்குனர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில், ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெளியான ‘பிளாஸ்ட்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன், ஜான் கொக்கன், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

திரையரங்குகளில் வெளியாகி 25 நாட்களை நிறைவு செய்துள்ள இத்திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது. குறிப்பாக, படத்தில் அர்ஜுனை விட நடிகைகள் பிரீத்தி முகுந்தன் மற்றும் அபிராமி ஆகியோருக்கு அதிக ஆக்ஷன் காட்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன. பிரீத்தி முகுந்தனின் அதிரடி சண்டை காட்சிகள் திரையரங்குகளில் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன.

‘பிளாஸ்ட்’ திரைப்படம் இதுவரை இந்தியாவில் மட்டும் 58.67 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. ஓடிடி ரிலீஸிற்கு முன்னதாக இந்த வாரம் இப்படம் 60 கோடி ரூபாய் வசூலைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘பிளாஸ்ட்’ திரைப்படம் வரும் ஜூன் 25ம் தேதி நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

Latest News