தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மற்றும் நடிகரான விஜய் இன்று தனது 52-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். தமிழக முதல்வராக பதிவியேற்ற பிறகு அவர் கொண்டாடும் முதல் பிறந்த நாள் விழாவாக இது பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தமிழக முதல்வர் விஜய்க்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
விஜய்க்கு அண்ணாமலை வாழ்த்து
தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதலமைச்சர் விஜய் அவர்கள், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது மக்கள் பணிகள் தொடர, எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், முதல் அமைச்சர் .ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்!தாங்கள் மகிழ்ச்சியோடும், உடல் – உள நலத்தோடும் பொதுவாழ்வில் பணியாற்றிட விழைகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து
பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ”தமிழக முதல்-அமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்வு வாழப் பிரார்த்திக்கிறேன்.” என்று அதில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்-க்கு, எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீண்ட ஆயுள் மற்றும் உடல்நலத்துடன் தாங்கள் பணியாற்றிட வாழ்த்துகிறேன்.
