“நான் இல்லையென்றால் இஸ்ரேல் இருக்காது!” – உலக அரசியலை உலுக்கிய டிரம்பின் சர்ச்சை கருத்து

இஸ்ரேல் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் தெரிவித்த கருத்து உலக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சில் நடைபெற்று வரும் 52-வது ஜி7 உச்சிமாநாட்டின் போது செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “அமெரிக்காவின் ஆதரவு இல்லையென்றால் இஸ்ரேல் நீண்ட காலம் நிலைத்திருக்க முடியாது. நான் இல்லையென்றால் இப்போது இஸ்ரேல் இருக்காது” என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், இஸ்ரேலின் தற்போதைய ராணுவ நடவடிக்கைகள் குறித்து அவர் கவலை தெரிவித்தார். குறிப்பாக, லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களில் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“ஒரு நபரை தேடுவதற்காக முழு கட்டிடத்தையும் தாக்க வேண்டிய அவசியமில்லை. அங்கு இருப்பவர்கள் அனைவரும் ஹெஸ்பொல்லா உறுப்பினர்கள் அல்ல” என்று டிரம்ப் கூறியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேபோல், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறித்து பேசிய அவர், “எனக்கு நெதன்யாகுவுடன் நல்ல உறவு உள்ளது. ஆனால் லெபனான் விவகாரத்தில் அவர் அதிக பொறுப்புடன் செயல்பட வேண்டும்” என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Related Post

Latest News