தமிழகத்தின் கடன் ரூ.13.18 லட்சம் கோடியா? வெள்ளை அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்

தமிழக அரசின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டார்.

தமிழக அரசின் நிதி நிலை குறித்து வெளியிடப்பட்டுள்ள வெள்ளை அறிக்கையில், மாநிலத்தின் மொத்த கடன் அளவு ரூ.13.18 லட்சம் கோடியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அரசு நேரடியாக பெற்றுள்ள கடன் ரூ.10 லட்சம் கோடியாகவும், பொதுத்துறை நிறுவனங்களின் கடன் ரூ.3.18 லட்சம் கோடியாகவும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் நிதி நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்ட இந்த வெள்ளை அறிக்கையில், கடந்த சில ஆண்டுகளில் மாநிலத்தின் கடன் சுமை கணிசமாக உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தமிழக நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கையில் உள்ள விவரம்:-

  1. தமிழகத்தின் உண்மையான மொத்த கடனளவு ரூ. 13.18 லட்சம் கோடியாக உள்ளது.
  2. ரூ. 13.18 லட்சம் கோடி மொத்த கடனில் ரூ. 10 லட்சம் கோடி நேரடி அரசுக் கடன். ரூ. 3.18 லட்சம் கோடி அரசு பொதுத்துறை நிறுவனங்களின் கடன்.
  3. 60 ஆண்டுகளில் தமிழக அரசு வாங்கிய கடன் ரூ. 5 லட்சம் கோடி.
  4. கடந்த திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் மட்டும் ரூ. 5 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது.
  5. 60 ஆண்டுகளில் வாங்கிய கடன் அளவுக்கு (ரூ. 5 லட்சம் கோடி) சமமான கடன் கடந்த திமுக ஆட்சியில் மட்டும் வாங்கப்பட்டுள்ளது.
  6. தமிழ்நாட்டில் ஒவ்வொரு தனிநபர் மீதும் ரூ. 1,29,934 கடன் உள்ளது.
  7. தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் வருவாய் பற்றாக்குறை 2.25 சதவீதத்தில் இருந்து 2.22 சதவீதமாக மாறியுள்ளது.
  8. தமிழ்நாட்டில் 2021-ல் வருவாய் பற்றாக்குறை ரூ. 46,538 கோடி. 2026-ல் வருவாய் பற்றாக்குறை ரூ. 78,324 கோடியாக அதிகரித்துள்ளது.
  9. மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் வருவாய் பற்றாக்குறை வரம்பை மீறி அதிகரித்துள்ளது.
  10. மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் மூலதனச் செலவீனம் குறைந்துள்ளது.
  11. தமிழகத்தின் மொத்த வருவாய் வரவில் வட்டி செலவீனம் 22.8 சதவீதமாக உள்ளது.
  12. தமிழகத்தின் மொத்த வருவாய் வரவில் தவிர்க்க முடியாத செலவுகள் 64.4 சதவீதமாக உள்ளன.
  13. கடந்த திமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன் அளவு 14.3 சதவீதம் அதிகரித்துள்ளது.
  14. கடந்த திமுக ஆட்சியில் முதலீடுகளுக்காக மட்டுமல்லாமல் அன்றாட செலவுகளுக்காகவும் கடன் பெறும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
  15. தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வருவாய் பற்றாக்குறை 2.2 சதவீதமாக உள்ளது.
  16. குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவாக உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
  17. தமிழக அரசு வாங்கிய கடன்களுக்கான வட்டி மட்டும் ஆண்டுக்கு ரூ. 67,000 கோடி செலுத்தப்படுகிறது.

Related Post

Latest News