தமிழ்நாட்டில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூன் 17, 2026 – புதன்கிழமை) பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது. காலை 9 மணி முதல் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு, பராமரிப்பு பணிகள் முடிவடைந்த பிறகு மதியம் 2 மணிக்குள் மீண்டும் மின்சாரம் வழங்கப்படும்
மின்தடை ஏற்படும் முக்கிய பகுதிகள்:
கோயம்புத்தூர்:
கீரநத்தம், வரதையங்கார்பாளையம், இடிகரை, அத்திப்பாளையம், சரவணம்பட்டி பகுதிகள், விஸ்வாசபுரம், ரெவென்யூ நகர், கரட்டுமேடு, விளாங்குறிச்சி பகுதிகள், சிவானந்தாபுரம், சத்தி ரோடு, சங்கரா வீதி, ரவி தியேட்டர் மற்றும் விநாயகா நகர் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
விளாங்குறிச்சி துணை மின் நிலைய பகுதிகள்:
தண்ணீர் பந்தல், லட்சுமி நகர், முருகன் நகர், சேரன்மா நகர், குமுதம் நகர், ஜீவா நகர், செங்காலியப்பன் நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
காளப்பட்டி, சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா, வள்ளியம்பாளையம், கே.ஆர்.பாளையம், விளாங்குறிச்சி, தண்ணீர் பந்தல், பீளமேடு இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர் ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
கே.ஜி. சாவடி துணை மின் நிலைய பகுதிகள்:
சாவடி புதூர், நவக்கரை, வீரப்பனூர் மற்றும் காளியாபுரம் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
