முன்னாள் அமைச்சரும் அதிமுக எம்எல்ஏவுமான சி.விஜயபாஸ்கர் தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் தமிழக சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 43-ல் இருந்து 42 ஆக குறைந்துள்ளது.
சமீபத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் தொகுதிகளைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்கள் ஏற்கனவே தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருந்தனர். தற்போது அந்த வரிசையில் சி.விஜயபாஸ்கரும் இணைந்துள்ளார்.
சி.விஜயபாஸ்கர் கடந்த 2001-ஆம் ஆண்டு அதிமுக சார்பில் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு முதல்முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
