சென்னையில் 3 மண்டலங்களில் இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம்

சென்னையில் நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று காலை முதல் 3 மண்டலங்களில் 24 மணி நேரத்திற்கு குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று (ஜூன் 12) காலை 9 மணி முதல் நாளை (ஜூன் 13) காலை 9 மணி வரை குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

மண்டலம் 13 – அடையாறு:

திருவான்மியூர், வேளச்சேரி, கோட்டூர் கார்டன், ஆர்.கே.மடம் தெரு, இந்திரா நகர் OHT உள்ளிட்ட பகுதிகள்.

மண்டலம் 14 – பெருங்குடி:

கொட்டிவாக்கம், பாலவாக்கம், கந்தன்சாவடி, பெருங்குடி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், ஜல்லடியான்பேட்டை, உள்ளகரம், புழுதிவாக்கம் உள்ளிட்ட பகுதிகள்.

மண்டலம் 15 – சோழிங்கநல்லூர்:

ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, அக்கரை, காரப்பாக்கம், வெட்டுவான்கேணி, சோழிங்கநல்லூர், ஒக்கியம்-துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள்.

குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் முன்கூட்டியே தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Post

Latest News