நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையேயான குடும்பத் தகராறு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. விவாகரத்து கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இடைக்கால ஜீவனாம்சம் தொடர்பான விவகாரம் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தனக்கும் தனது குழந்தைகளுக்கும் கடந்த ஆண்டு முதல் எந்தவித நிதி உதவியும் வழங்கப்படவில்லை எனக் கூறி, ஆர்த்தி குடும்ப நல நீதிமன்றத்தில் இடைக்கால ஜீவனாம்சம் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை பரிசீலித்த உயர்நீதிமன்றம், குறிப்பிட்ட காலத்திற்குள் குடும்ப நல நீதிமன்றம் விசாரணையை முடித்து உத்தரவு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்நிலையில், அந்த காலக்கெடுவை மேலும் நீட்டிக்க வேண்டும் என ரவி மோகன் தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின்போது ஆர்த்தி தரப்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், கால அவகாசம் வழங்க வேண்டிய அவசியம் இல்லை எனக் கருதி ரவி மோகனின் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், தேவையான நிவாரணத்தை பெற குடும்ப நல நீதிமன்றத்தையே அணுகுமாறு அறிவுறுத்தியது.
