மலையாளத் திரையுலகின் முன்னணி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் சலீம் குமார் உடல்நலக் குறைவு காரணமாகக் கொச்சியிலுள்ள அமிர்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர் சலீம் குமார் கடுமையான கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இந்த சூழலில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த அவருக்கு, திடீரென உடல்நிலை மோசமடைந்தது.
இதனை தொடர்ந்து கொச்சி அமிர்தா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், தற்போது அவர் வென்டிலேட்டர் உதவிடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
