ரெயில்வே பயணிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் உள்ள ஐஆர்சிடிசி சமையலறைகளில் 2,394 AI கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் வழங்கப்படும் உணவின் தூய்மையை ஆராயும் நோக்கில், இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட உணவு கண்காணிப்பு அமைப்பு தற்போது மேலும் நவீனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள எண்ணூற்றுக்கும் மேற்பட்ட ஐஆர்சிடிசி சமையலறைகள், இரண்டாயிரத்து முந்நூற்று தொண்ணூற்று நான்கு செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் கொண்ட கேமராக்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் அனைத்தும் புதுடெல்லியில் அமைந்துள்ள ஒரு மத்திய தலைமை அறையிலிருந்து முழுமையாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
