முதல்வர் விஜய்யின் வருகையால் திருச்சியில் போக்குவரத்து மாற்றம் : மக்கள் அவதி

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த மாதம் 10-ந்தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். தனக்கு வாக்களித்த திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக முதலமைச்சர் விஜய் இன்று (திங்கட்கிழமை) மாலை 2.30 மணி அளவில் தனி விமானம் மூலம் திருச்சிக்கு வந்தடைந்தார்.

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் வருகையை முன்னிட்டு மாநகரின் முக்கிய சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதன் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. சில பகுதிகளில் வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கைகளால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். குறிப்பாக காவிரி பாலம் வழியாக இயக்கப்பட்டு வந்த பேருந்துகள் நிறுத்தப்பட்டதால், பயணிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.

பயணிகள் பலர் வழக்கமான நிறுத்தங்களுக்கு செல்ல முடியாமல் இடைப்பட்ட பகுதிகளில் இறக்கப்பட்டதாக அதிருப்தி தெரிவித்தனர். இதனால் பயணிகள் மற்றும் போக்குவரத்து ஊழியர்களுக்கு இடையே வாக்குவாதமும் ஏற்பட்டது.

பொதுமக்களின் அவசரத் தேவையை பயன்படுத்திக் கொண்டு சில ஆட்டோ ஓட்டுநர்கள் வழக்கத்தை விட அதிக கட்டணம் வசூலித்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Related Post

Latest News