முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் சித்தராமையா

கர்நாடக மாநில அரசியலில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த பரபரப்பு தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சூழலில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில், சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் மேலிடத்தின் ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து டி.கே. சிவகுமார் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். கர்நாடக காங்கிரஸில் ஏற்பட்டுள்ள இந்த தலைமை மாற்றம், அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளுக்கு முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

Related Post

Latest News