கர்நாடக மாநில அரசியலில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த பரபரப்பு தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
சித்தராமையாவின் ராஜினாமாவைத் தொடர்ந்து, கர்நாடகாவின் புதிய முதல்வராக டி.கே.சிவக்குமார் நாளை பதவியேற்க உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக ஆளுநர் தற்போது இந்தூர் நகருக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவர் திரும்பியவுடன் முதலமைச்சர் சித்தராமையா அவரை நேரில் சந்தித்துத் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
