சென்னையில் காவலர்கள் என்று பொய் கூறி, வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மிரட்டி நகை மற்றும் பணத்தைப் பறித்துச் சென்ற வழக்கில், ஊர்க்காவல் படை வீரர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் பெண் ஒருவர் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல், தங்களை போலீஸ் என்று கூறி மிரட்டியுள்ளது.
இதையும் படிங்க : தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? புதிய தேதி அறிவிப்பு
பின்னர், அந்த பெண்ணிடம் இருந்து 4 சவரன் தங்க நகை மற்றும் ரூ. 70,000 ரொக்கப் பணத்தைப் பறித்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேர் கொண்ட கும்பலில் 3 பேரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
