வேலை செய்தபோது நேர்ந்த துயரம்.. பலாப்பழம் தலையில் விழுந்து பெண் உயிரிழப்பு

தஞ்சை மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றிய பெண் மீது பலாப்பழங்கள் விழுந்ததில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் பகுதியை சேர்ந்த லட்சுமணனின் மனைவி சின்னப்பொண்ணு (35), மேல ஒட்டங்காடு பகுதியில் உள்ள கோவில் அருகே தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தார். அரசு 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் செடி, கொடிகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் அவர் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு இருந்த பலா மரத்தில் இருந்து திடீரென மூன்று பலாப்பழங்கள் அவரது தலையில் விழுந்தன. இதில் சின்னப்பொண்ணுக்கு கடுமையான காயம் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், சம்பவம் குறித்து திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Post

Latest News