தனுஷ் நடிப்பில், விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவான ‘கரா’ திரைப்படம் ஏப்ரல் 30 அன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன.
இடைவேளைக்கு முன் வரும் திருப்பம், விறுவிறுப்பான சண்டைக் காட்சிகள் மற்றும் கிராமத்து பின்னணி ஆகியவை ரசிகர்களிடையே அதிகமாக பேசப்பட்டன. குறிப்பாக, தனுஷின் மாறுபட்ட தோற்றமும் உணர்ச்சி நிறைந்த நடிப்பும் பாராட்டுகளை பெற்றன.
100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான ‘கர’ திரைப்படம் 50 கோடி ரூபாய்க்கும் குறைவாகவே வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தனுஷின் ‘கர’ திரைப்படம் வருகிற 30ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாகும் என கூறப்படுகிறது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என கூறப்படுகிறது.
