நடிகர் சூர்யா மற்றும் திரிஷா இணைந்து நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ள இப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் வெளியான முதல் நாளிலிருந்தே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், படக்குழு வெளியிட்ட தகவலின்படி, ‘கருப்பு’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.207 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
இசையமைப்பாளர் சாய் அபயங்கர் வழங்கிய பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. சூர்யாவின் திரைப்பட வாழ்க்கையில் ரூ.200 கோடி வசூலை கடந்த முதல் படமாக இது உருவெடுத்துள்ளது.
