முன்னாள் சபாநாயகர் தனபால் அதிமுகவில் இருந்து விலகல்

அதிமுகவில் தற்போது நிலவி வரும் தீவிர உட்கட்சிப் பூசல்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் காரணமாக, அடிமட்டத் தொண்டர்கள் முதல் முக்கிய நிர்வாகிகள் வரை பலரும் கட்சியை விட்டுத் தொடர்ந்து விலகி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த சூழலில், அதிமுகவின் மிக மூத்த தலைவரும், முன்னாள் சபாநாயகருமான தனபால் அதிமுகவில் இருந்து விலகியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “ அதிமுகவில் இருந்து நான் விலகி நீண்ட நாட்கள் ஆகிறது. என்னை போன்றவர்களை புறக்கணித்ததால் அதிமுகவை இன்று மக்கள் புறக்கணித்துள்ளனர். அதிமுகவில் எனக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை, அதிமுகவில் தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள். தவெகவில் எனது மகன் அமைச்சராக இருப்பது மகிழ்ச்சி” என்று தனபால் தெரிவித்துள்ளார்.

1977, 1980, 1984 மற்றும் 2001 ஆகிய ஆண்டுகளில் இந்தத் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தனபால் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2001-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட அதிமுக அமைச்சரவையில் உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் அவருக்கு அ.தி.மு.க.வில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

Latest News