ஒரே நாள் இரவில் 100-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது : சென்னையில் நடந்த அதிரடி

சென்னையில் குற்றங்களையும் போதைப்பொருள் புழக்கத்தையும் ஒடுக்க காவல் ஆணையர் உத்தரவின் பேரில் நேற்று இரவு தீவிர விடிய விடிய சோதனை நடத்தப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையின் முக்கிய காவல் எல்லைகளில் தனித்தனி படைகள் அமைக்கப்பட்டு, நேற்று இரவு முழுவதும் தீவிர தேடுதல் மற்றும் ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மண்டல வாரியாகக் கைது செய்யப்பட்டவர்கள்:

புளியந்தோப்பு – 20 நபர்கள்

தி.நகர் – 18 நபர்கள்

அடையாறு – 16 நபர்கள்

மயிலாப்பூர் – 12 நபர்கள்

அண்ணாநகர் – 10 நபர்கள்

கைது செய்யப்பட்டுள்ள நபர்களைத் தனித்தனியாக ரகசிய இடங்களில் வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சட்டவிரோதமாகக் கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களைக் கடத்தி, விற்பனை செய்து வந்த கும்பல்கள் மீது இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளது. பழைய குற்றவாளிகள் மற்றும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் மீண்டும் ஏதேனும் சதித்திட்டங்களிலோ அல்லது கொலை, கொள்ளை போன்ற கொடூரமான செயல்களிலோ ஈடுபடாமல் தடுக்கவே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Post

Latest News