எரிபொருள் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், டெல்லியில் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கங்கள் மே 21 முதல் 23 வரை மூன்று நாள் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளன.
கடந்த சில நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இரண்டு முறை உயர்த்தப்பட்டுள்ளது. மே 15ஆம் தேதி லிட்டருக்கு சுமார் ரூ.3 உயர்ந்த நிலையில், மீண்டும் லிட்டருக்கு 90 பைசா வரை உயர்ந்துள்ளது. சிஎன்ஜி விலையும் கிலோவுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.87 ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க : அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் புகார் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு
பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், டெல்லியில் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இந்த சூழலில், எரிபொருள் செலவுக்கு ஏற்ப கட்டணங்களை திருத்தி வழங்க வேண்டும் என ஓட்டுநர் சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன.
இதற்கிடையில், ஓட்டுநர் சங்கங்கள் மே 21 முதல் மே 23 வரை மூன்று நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளன.
