உத்தரகாண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் காலமானார்

உத்தரகாண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான புவன் சந்திர கந்தூரி இன்று காலமானார். அவருக்கு வயது 91.

வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : மொபைலுக்கு தடை., அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கு அரசு போட்ட புது உத்தரவு

யார் இந்த புவன் சந்திர கந்தூரி?

1934ஆம் ஆண்டு டேராடூனில் பிறந்த கந்தூரி, இந்திய ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக பணியாற்றியவர். பின்னர் அரசியலுக்கு வந்த அவர், கர்வால் தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, உத்தரகாண்ட் மாநில அரசியலில் முக்கிய தலைவராக இருந்துள்ளார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக பணியாற்றிய போது, இந்தியாவின் முக்கிய சாலை மேம்பாட்டு திட்டங்களில் முக்கிய பங்காற்றினார்.

Related Post

Latest News