தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள சூழலில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு முக்கிய கருத்துகளை பகிர்ந்தார்.
அவர் பேசியதாவது :
மாணவர்கள் தான் நாட்டின் எதிர்கால செல்வம் என்றும், அவர்கள் திறமைகளை வெளிப்படுத்த ஆசிரியர்கள் வாய்ப்பு வழங்க வேண்டும். வகுப்பறையில் ஆசிரியர்கள் மட்டுமே பேசாமல், மாணவர்களும் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்தும் சூழல் உருவாக்கப்பட வேண்டும்.
பள்ளிக்கு வரும் மாணவர்கள் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் வர வேண்டும். அதற்கான நல்ல சூழலை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும். அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்வோரைக் காட்டிலும் அமைதியாக இருக்கும் மாணவர்களை ஆசிரியர்கள் கூடுதல் அக்கறையுடன் கவனிக்க வேண்டும்.
இதையும் படிங்க : ஜானகி அம்மாள் நினைவு தினம்: எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி
இருமொழிக் கொள்கை தொடர்பாக எழுந்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தமிழகத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்றும், எந்த அழுத்தத்திற்கும் அரசு அடிபணியாது. தமிழகத்தில் இரு மொழி கொள்கை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம் ஆனால் இந்த திட்டம் குறித்து ஆலோசித்து வருகிறோம் எனவும் கூறியுள்ளார்.
