அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் புகார் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு

அரசு துறைகளில் லஞ்சம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் லஞ்ச ஒழிப்பை கடுமையாக அமல்படுத்த அரசு புதிய நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் அல்லது ஊழியர்கள் மீது ஆதாரத்துடன் புகார் அளித்தால், தகவல் வழங்குபவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை சன்மானம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 24 மணி நேரமும் செயல்படும் கட்டணமில்லா உதவி எண்ணாக 1800 425 1555 வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் எந்த நேரத்திலும் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Related Post

Latest News