நகைச்சுவை நடிகர் முத்துக்காளையின் மனைவி காலமானார்

நகைச்சுவை நடிகர் முத்துக்காளையின் மனைவி மாலதி, 19 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு இன்று உயிரிழந்தார்.

கடந்த 19 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாலதி, இன்று காலை சுமார் 9 மணியளவில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு வயது 47 ஆகும்.

மாலதியின் உடல் இறுதிச்சடங்கிற்காக திருக்கோதையாபுரம் கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இன்று இரவு சொந்த ஊரில் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.

சமீபத்தில் தனது மனைவியின் மருத்துவச் செலவுகளுக்காக உதவி கோரி நடிகர் முத்துக்காளை காணொளி மூலம் தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் ராஜ்மோகன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று தேவையான உதவிகளை செய்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும், சிகிச்சை பலனளிக்காமல் மாலதி உயிரிழந்தது முத்துக்காளை குடும்பத்திற்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Post

Latest News