பிரபல சினிமா தயாரிப்பாளர் ஆற்றில் குதித்து தற்கொலை

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் (85) சென்னை அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென வண்டியை நிறுத்துமாறு கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பின்னர் அவர் காரிலிருந்து இறங்கி அருகிலிருந்த ஆற்றில் குதித்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை மீட்டனர்.

பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர், பிரம்மச்சாரிகள், டபுள்ஸ், அவள் பாவம், நினைக்காத நாளில்லை படங்களை தயாரித்துள்ளார். தமிழ் திரைப்பட உலகில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த தயாரிப்பாளர் கே.ராஜன் உயிரிழந்த சம்பவம் திரைத்துறையிலும் ரசிகர்களிடையிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Post

Latest News