எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பாதுகாப்பு அணிவகுப்பு வாகனங்களின் பயன்பாட்டை குறைக்க பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது பாதுகாப்பு வாகனங்களை 12-ல் இருந்து 4 ஆக குறைத்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
சர்வதேச அளவில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணங்களால் தேவையற்ற வாகன பயன்பாட்டை குறைக்க மாநில அரசுகள் முன்வர வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டிருந்தார்.
இதையும் படிங்க : இந்த மாதம் மகளிர் உரிமைத்தொகை கிடைக்குமா? : முதலமைச்சர் சொன்ன முக்கிய தகவல்
இந்நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தனது பாதுகாப்பு அணிவகுப்பில் இருந்த வாகனங்களின் எண்ணிக்கையை 12-ல் இருந்து 4 ஆகக் குறைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதன் பின்னர், அவர் சட்டப்பேரவைக் கூட்டத்திற்காக தலைமைச் செயலகத்துக்கு சென்றபோதும் குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்களே பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதே போல ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தனது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
