இந்த மாதம் மகளிர் உரிமைத்தொகை கிடைக்குமா? : முதலமைச்சர் சொன்ன முக்கிய தகவல்

தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மே மாதத்திற்கான ரூ.1,000 விரைவில் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தை சட்டசபையில் கடந்த 2023, மார்ச் 27-ம் தேதி முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த திட்டம், தற்போது 1.31 கோடி பெண்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் சமயத்தில் 3 மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகையாக ரூ. 3,000 மற்றும் கோடைக் கால சிறப்புத் தொகையாக ரூ. 2,000 என மொத்தம் ரூ. 5,000 வழங்கப்பட்டது. நடந்து முடிந்த தேர்தலில் ஆட்சி மாறியதால் மகளிர் உரிமைத்தொகை கிடைக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் இருந்து வந்தது.

இந்நிலையில், தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி. மே மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, ரூ.1,000 பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

Related Post

Latest News