தவெக அரசுக்கு ஆதரவு – அதிமுகவினரின் பொறுப்புகள் பறிப்பு

தவெக அரசுக்கு ஆதரவு அளித்த அதிமுகவினரின் பொறுப்புகள் பறிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பிலும், திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் திரு. நத்தம் இரா. விசுவநாதன், M.L.A., அவர்களும்,

கழக தலைமை நிலையச் செயலாளர் பொறுப்பிலும், கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் திரு. S.P. வேலுமணி, M.L.A., அவர்களும்,

கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், விழுப்புரம் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் திரு. C.Ve. சண்முகம், M.L.A., அவர்களும்,

கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் திரு. R. காமராஜ், M.L.A., அவர்களும்,

கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், புதுக்கோட்டை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் டாக்டர் C. விஜயபாஸ்கர், M.L.A., அவர்களும்,

கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் திரு. பி. தங்கமணி அவர்களும்,

கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், தருமபுரி மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் திரு. K.P. அன்பழகன், M.L.A., அவர்களும்,

கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், திருவள்ளூர் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் திரு. பா. பென்ஜமின் அவர்களும்,

கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் திரு. உடுமலை K. ராதாகிருஷ்ணன் அவர்களும்,

கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், தேனி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் திரு. S.T.K. ஜக்கையன், Ex. M.P., அவர்களும்,

கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், திருநெல்வேலி புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் முனைவர் இசக்கி சுப்பையா, M.L.A., அவர்களும்,

கடலூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. M.C. சம்பத் அவர்களும்,

திருப்பத்தூர் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. K.C. வீரமணி, M.L.A., அவர்களும்,

கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. M.R. விஜயபாஸ்கர், M.L.A., அவர்களும்,

ஈரோடு மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. K.V.இராமலிங்கம், Ex. M.P., அவர்களும்,

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும்
திரு. P. பாலகிருஷ்ண ரெட்டி, M.L.A., அவர்களும்,

கடலூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. ஆ. அருண்மொழிதேவன், M.L.A., அவர்களும்,

ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. சு. ரவி, Ex. M.L.A., அவர்களும்,

ராணிப்பேட்டை மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. S.M. சுகுமார், M.L.A., அவர்களும்,

திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும்
திரு. C. மகேந்திரன், Ex. M.L.A., அவர்களும்,

நீலகிரி மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. கப்பச்சி D. வினோத் அவர்களும்,

திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. J. சீனிவாசன் அவர்களும்,

திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. M. பரஞ்ஜோதி அவர்களும்,

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. ப. குமார், Ex. M.P., அவர்களும்,

தஞ்சாவூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. M. ரெத்தினசாமி, Ex. M.L.A., அவர்களும்,

தஞ்சாவூர் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. M. சேகர் அவர்களும்,

இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Post

Latest News