த.வெ.க. அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் : இதுவரை யாரெல்லாம் ஆதரவு?

தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களை பிடித்தது. தி.மு.க. கூட்டணி 73 இடங்களுடன் 2-வது இடத்தையும், அ.தி.மு.க. கூட் டணி 53 இடங்களுடன் 3-ம் இடத்துக்கும் தள்ளப்பட்டது.

இதையடுத்து காங்கிரஸ் (5), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (2), விடுதலை சிறுத்தைகள் கட்சி (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) ஆகிய கட்சிகள் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு கரம் நீட்டி உள்ளன. இதனால் சட்டசபையில் தமிழக வெற்றி கழகத்திற்கான பலம் 119 ஆக அதிகரித்திருக்கிறது.

இந்த சூழலில், தமிழக சட்டசபையில் இன்று காலை 9.30 மணிக்கு பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான தீர்மானம் நடைபெற்று வருகிறது.

த.வெ.க. அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் இதுவரை காங்கிரஸ் 5, மா.கம்யூனிஸ்ட் 2, விசிக 2 MLA க்கள் ஆதரவு அளித்துள்ளனர்.

அமமுக வில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ காமராஜ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

Related Post

Latest News