சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பாரா விஜய்? இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களை பிடித்தது. தி.மு.க. கூட்டணி 73 இடங்களுடன் 2-வது இடத்தையும், அ.தி.மு.க. கூட் டணி 53 இடங்களுடன் 3-ம் இடத்துக்கும் தள்ளப்பட்டது.

இதையடுத்து காங்கிரஸ் (5), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (2), விடுதலை சிறுத்தைகள் கட்சி (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) ஆகிய கட்சிகள் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு கரம் நீட்டி உள்ளன. இதனால் சட்டசபையில் தமிழக வெற்றி கழகத்திற்கான பலம் 119 ஆக அதிகரித்திருக்கிறது.

இதையும் படிங்க : நாடு முழுவதும் மே 3ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து

இந்த சூழலில், தமிழக சட்டசபையில் இன்று காலை 9.30 மணிக்கு பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான அரசினர் தீர்மானத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்மொழிய இருக்கிறார். அதே நேரத்தில் அதிமுக உறுப்பினர்கள் 30 பேரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக உறுப்பினர் ஒருவரும் பெரும்பான்மையை நிரூபிக்க தமிழக வெற்றிக் கழக அரசுக்கு கூடுதலாக ஆதரவு தருவார்கள் என்று எதிரிபார்க்கப்படுகிறது.

எனவே இதில் விஜய் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்று அரசியல் நோக்கங்கள் கருதுகிறார்கள்.

Related Post

Latest News