நாடு முழுவதும் மே 3ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து

நாடு முழுவதும் மே 3ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மே 3ஆம் தேதி நடைபெற்ற தேர்வுக்குப் பிறகு, ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. விரைவில் புதிய தேர்வு மீண்டும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தேர்வு முகமை வெளியிட்ட தகவலின்படி, சட்ட அமலாக்க அமைப்புகள் வழங்கிய தகவல்களை ஆய்வு செய்தபோது, தேர்வின் நம்பகத்தன்மை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உறுதியானதாக கருதப்பட்டது. “தேர்வின் நேர்மையை பாதுகாக்க வேண்டியது அவசியம்” என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வினாத்தாள் எப்படி வெளியானது? இதில் திட்டமிட்ட முறைகேடு இருந்ததா? யார் யார் தொடர்புடையவர்கள்? என்பதனை சிபிஐ விசாரிக்க உள்ளது.

மீண்டும் நடைபெறவுள்ள தேர்வுக்காக மாணவர்கள் புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. ஏற்கனவே பதிவு செய்த விவரங்களே பயன்படுத்தப்படும். கூடுதல் தேர்வு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே செலுத்திய கட்டணம் திருப்பி வழங்கப்படும். புதிய ஹால் டிக்கெட்டுகள் பின்னர் வெளியிடப்படும். இந்த அறிவிப்பு நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Post

Latest News