தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். கோவில்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து மையங்கள் அருகிலுள்ள கடைகள் இரண்டு வாரங்களில் மூடப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் 4,829 ‘டாஸ்மாக்’ மதுகடைகள் இயங்கி வருகின்றன. மாதம் ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு மது விற்பனை நடைபெற்று வருகிறது. கடந்த நிதி ஆண்டில் மட்டும் மது விற்பனை மூலம் அரசுக்கு ரூ.48 ஆயிரத்து 344 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

மதுவால் குடும்பங்களும் இளைஞர்களும் பாதிக்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வந்தது. இந்த மதுக்கடைகளை மூட வேண்டும் என்பது பல் பேரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்த சூழலில் புதிய ஆட்சியை பொறுப்பேற்ற முதலமைச்சர் விஜய், போதைப்பொருள் மற்றும் மதுவால் ஏற்படும் சமூக பாதிப்புகளை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை தொடங்கியுள்ளார். தற்போது மாநிலம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார்.

முதற்கட்டமாக கோவில்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் அருகே இயங்கி வந்த கடைகள் மூடப்பட உள்ளன. குறிப்பாக வழிபாட்டு தலங்கள் அருகிலிருந்த 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலிருந்த 186 கடைகள் மற்றும் பேருந்து, ரெயில் நிலையங்களின் 500 மீட்டர் சுற்றளவில் இருந்த 255 கடைகள் இரண்டு வாரங்களுக்குள் செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளில் பணியாற்றி வந்த ஊழியர்களுக்கு மாற்று பணியிடங்கள் வழங்கப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் டாஸ்மாக் பார்களில் நடைபெறும் சட்டவிரோத மது விற்பனையை கட்டுப்படுத்த தனிப்பட்ட கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Related Post

Latest News