பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு

பிரதமர் மோடி செல்லவிருந்த பெங்களூரு பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

கர்நாடகாவில் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டிருந்த நேரத்தில், அவர் செல்லவிருந்த பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள நைஸ் ரோடு சந்திப்பில் பாதுகாப்பு சோதனையின் போது இந்த வெடிபொருள் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் அப்பகுதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, பாதுகாப்பு நடைமுறைகளை பலப்படுத்தினர். இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்த தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் டெல்லியிலிருந்து பெங்களூரு சென்றுள்ளனர்.

இது பாதுகாப்பு அலட்சியமா அல்லது திட்டமிட்ட சதியா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Post

Latest News