திமுக தலைவர் மு.க ஸ்டாலினை சந்தித்த முதலமைச்சர் விஜய்!

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். ஆழ்வார்பேட்டையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு சென்று சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது, மு.க.ஸ்டாலின் அன்புடன் விஜயை வரவேற்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். புதிய ஆட்சிக்கு தனது நல்வாழ்த்துகளை தெரிவித்ததுடன், இருவரும் சில நிமிடங்கள் கலந்துரையாடியதாக கூறப்படுகிறது.

முதலமைச்சர் விஜயின் வருகையின்போது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பலரும் நேரில் இருந்து வரவேற்றனர்.

Related Post

Latest News