தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் இன்று பதவியேற்றுக்கொண்டார். விஜய்க்கு ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். விஜய் உடன் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இதையடுத்து பேசிய அவர் :- நீ வா தம்பி நாங்க பாத்துக்குறோம் என நீங்கள் எனக்கு வாய்ப்பு கொடுத்தீர்கள். இந்த பயணத்தில் எனக்கு ஏராளமான கஷ்டங்கள் இருந்தாலும், எனக்காக உடன் இருந்த உங்களுக்கும் அதே கஷ்டங்கள், அதே அவமானங்கள். அதை நீங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் என்னுடன் இருந்தீர்கள்.
என்னை முதல்வராக்கியிருக்கிறீர்கள். என்னுடைய உறவுகளே, சொந்தங்களே நான் தேவதூதன் கிடையாது. அது செய்வேன், இது செய்வேன் எனச் சொல்லி ஏமாற்ற மாட்டேன். எது சாத்தியம் என்பதை மட்டுமே செய்வேன். தமிழ்நாட்டில் ரூ.10 லட்சம் கோடி மேல் கடன் உள்ளது.
அரசிடம் என்ன இருக்கிறது எது இல்லை என்பது குறித்து வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட இருக்கிறேன். அதை தான் முதலில் செய்ய இருக்கிறேன். எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக ஒளிவு, மறைவு இல்லாமல் செய்வேன்.
எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். நான் கூறியதை படிப்படியாக நிறைவேற்றுவேன். அதற்கு அவகாசம் கொடுங்கள். பெண்கள் பாதுகாப்பை ஸ்ட்ரிக்டாக வைத்திருப்பேன். போதைப்பொருள் தடுப்புக்கு உரிய முயற்சி எடுப்பேன். சட்டம் ஒழுங்கு மூலம் எல்லாருக்குமான பாதுகாப்பை உறுதி செய்வேன்.
பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், மீனவர்கள், உழைக்கும் மக்கள் அனைவரும் இந்த தவெக அரசில் நன்றாக இருப்போம். சிறுபான்மை சகோதரர்களுக்காக இந்த அரசு உடன் நிற்கும். அதில் சந்தேகம் வேண்டாம். அதில் விஜயை நம்பலாம்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
