தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் இன்று பதவியேற்றுக்கொண்டார். விஜய்க்கு ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். விஜய் உடன் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பதவியேற்ற பின் முக்கிய கோப்புகளில் கையெழுத்தை போட்டுள்ளார். குறிப்பாக, குடும்பங்களின் மின்சாரச் செலவை குறைக்கும் நோக்கில் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்திற்கு அவர் ஒப்புதல் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனுடன் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த கோப்புகளிலும் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பேசிய அவர், “பசி என்றால் என எனக்கு நன்றாகவே தெரியும். நான் மன்னர் பரம்பரையில் இருந்து வந்தவன் அல்ல. இங்கிருக்கும் உங்களைப் போலவன்தான்.
மோசமான நிலையில் தமிழ்நாட்டின் நிதி நிலை இருக்கிறது. ஒளிவு மறைவு இன்றி நிர்வாகத்தை நடத்துவேன்.
பொறுப்பு கொடுத்திருக்கிறீர்கள், அதேபோல போதிய அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த விஜய் தப்பு செய்ய மாட்டான். தப்பு செய்யவும் விடமாட்டான். யாருக்காவது அப்படி எண்ணம் இருந்தால், இப்பவே அதை அழித்துவிடுங்கள். ஒரே பவர் செண்டர் அதுநான் தான்.
நாம் பதவிக்கு வந்துவிட்டோம். எது வேண்டுமானாலும் செய்யலாம் என நினைத்திருந்தால் அந்த எண்ணத்தை அழித்துவிடுங்கள்.
நம்பிக்கையோடு இருங்கள், நல்லதே நடக்கும் என அவர் பேசியுள்ளார்.
